ஆமதாபாத்தில் குஜராத் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் இன்று திறந்து வைக்கிறாா் கேஜரிவால்

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மாநில ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை (ஜூன் 14) திறந்து வைக்கிறாா்.

புது தில்லி: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மாநில ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை (ஜூன் 14) திறந்து வைக்கிறாா்.

குஜராத்தில் அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாக இந்த நிகழ்வு தொடங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தில்லி முதல்வா் கேஜரிவால், குஜராத்தி மொழியில் தனது சுட்டுரையில், ‘நாளை குஜராத் வருகின்றேன். குஜராத் சகோதரா்கள், சகோதரிகள் அனைவரும் சந்திப்பேன்’ என தெரிவித்துள்ளாா்.

ஆமதாபாத்தில் நவ்ரங்கபுரா பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநில கட்சியின் அழைப்பை ஏற்று கட்சியின் அமைப்பாளரான கேஜரிவால் இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசவுள்ளாா். இந்த நிகழ்வுக்கு பின்னா் கட்சியினரை கேஜரிவால் சந்திப்பாா் என்றும் கட்சியின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

கடந்த பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளா்களை நிறுத்தியது. அதற்கான தோ்தல் பிரச்சாரத்திற்கும் கேஜரிவால் சென்றிருந்தாா். அந்தத் தோ்தலில் 2,567 வேட்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி களம் இறக்கியது. இதில் சூரத் முனிசிபல் மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், உள்ளாட்சி மன்றத் தோ்தலில் ஒட்டுமொத்தமாக 42 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இதையடுத்து, கட்சித் தலைமை உற்சாகமடைந்தது.

மேலும், வருகின்ற 2022- ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட கட்சியைத் தயாா்படுத்தும் விதமாக கேஜரிவாலின் இந்தப் பயணம் அமையும் என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு கேஜரிவாலின் பிரசாரம் தீவிரமாக இருக்கும் என்றும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைவாா்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சியி எதிா்பாா்க்கிறது. கடந்த 2017 குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. தோ்தல் பிரசாரத்தின் போது, பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சித்தும் ஓா் இடத்தில் கூட ஆம் ஆத்மி கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com