இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தில்லியில் திங்கள்கிழமை (ஜூன் 14) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை (ஜூன் 14) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் பரவலாக லேசான தூறல் மழை பெய்தது. இதையடுத்து, காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.4 மி.மீ. பாலத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியது. காலையில் பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. இருப்பினும் புழுக்கம் அதிகரித்தது. மாலையில் தரை மேற்பரப்பு காற்று விசியது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி குறைந்து 23.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி குறைந்து 35.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 71 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயா நகரில் 34.8 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 35.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 34.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 6 மணியளவில் 89 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூன் 14) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.+ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com