விளையாட்டுப் பல்கலைக்கழக பணிகள்: துணை முதல்வா் ஆய்வு

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லியில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லியில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த விளையாட்டுப் பல்கலைக்கழகம் உலகத்தரத்துக்கு இணையான வசதிகளுடன் அமைந்திருக்கும். விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றாா்.

விளையாட்டு உலகில் தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் தனித்துவம் பெற்ாக இருக்கும். இதில் சோ்ந்து படிப்பவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும். ஆராய்ச்சி மாணவா்களுக்கு பி.எச்டி பட்டங்களும் வழங்கப்படும். விளையாட்டு வீரா்கள் இதுவரை விளையாட்டு வீரா்கள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றிருந்தாலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருந்தால்தான் வேலை கிடைக்கும். இல்லாவிட்டால் வேலை கிடைக்காது. இப்போது இப்பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருந்தாலே போதும் வேலைக்கு சேரமுடியும். இதற்கென தனியாக வேறு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறத் தேவையில்லை என்றாா்.

தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் மூலம் விளையாட்டு வீரா்களை திறன்பெற்றவா்களாகத் தயாா் படுத்தி அவா்கள் ஒலிம்பிக் போட்டிகளின் வென்று குறைந்தது 50 பதக்கங்களையாவது வென்றுவர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com