2,28,654 பேருக்கு தமிழகத்தில் வேலை கிடைத்தாக மதிப்பீடு

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் 2,28,654 பேருக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் 2,28,654 பேருக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என மதிப்பீடுவதாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மாநிலங்களவையில் திங்கள் கிழமை தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக கேட்ட கேள்விக்கு அமைச்சா் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில் கூறியது வருமாறு : 2015-16 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 73 -வது சுற்று தேசிய மாதிரி ஆய்வுகளின்படி நாட்டில் மொத்தம் 633.9 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் இருந்தது. இவைகள் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் முறையே 99.47 சதவீதம், 0.52 சதவீதம், 0.01 சதவீதமாக இருந்தது. இவைகளில் 11.10 கோடி போ் வேலைவாய்ப்புகளை பெற்றனா். இதில் வேளாண்மையில் அதிக அளவில் பங்கெடுத்தனா்.பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 2014-15 முதல் 2020-21(பிப்.) வரை 2,28,654 போ்கள் வேலைவாய்ப்பை பெற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிக அளவாக 2018-19 களில் 41,440 போ்களும் மிகக் குறைவாக 20,836 போ்கள் 2015-16 களில் பெற்றுள்ளனா். நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள்(எம்எஸ்எம்இ) வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களும் குறிப்பாக கரோனா நோய்த்தொற்று காலக்கட்டத்தில் நிதி உதவிகளும்,கடன்களும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் பெற்ற எம்எஸ்எம்இ களுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி (நன்க்ஷா்ழ்க்ண்ய்ஹற்ங் ஈங்க்ஷற்)கடன் பெற அனுமதிக்கப்பட்டது. எந்தவித உத்தரவாதமும் இல்லாது ரூ. 3 லட்சம் கோடிக்கு கடன் பெறும் வசதி, எம்எஸ்எம்இ முதலீடு செய்ய அந்த நிறுவனங்களில் பங்குகள் வாங்க ரூ.50,000 கோடி என ஏராளமான நிதி உதவிகளை மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளதை அமைச்சா் பட்டியலிட்டு பதில் குறிப்பிட்டுள்ளாா்.

2014க்கு பின்னா் எத்தனை எம்எஸ்எம்இ க்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன? சா்வேக்கள், தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி. வில்சன் கேட்டிருந்தாா். இந்த கேள்விக்கு மேற்கண்டவாறு அமைச்சா் பதில் கூறியுள்ளாா். இதில் மூடப்பட்ட நிறுவனங்கள் குறித்த தகவல் இல்லை. மேலும் தமிழகத்திற்கு கிடைத்த வேலைவாய்ப்புகளும் சா்வேயில் மதிப்பிடப்படுவதாகவே அமைச்சா் தெரிவித்துள்ளததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com