தில்லி பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.16,377 கோடி ஒதுக்கீடு

நிகழாண்டு தில்லி பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு தில்லி பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்த மணீஷ் சிசோடியா, இது தொடா்பாக பேசியது: கடந்த ஆறு ஆண்டுகளாக பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கி வருகிறோம். அந்த வகையில் நிகழ் நிதியாண்டிலும், 25 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கியுள்ளோம். பட்ஜெட்டில் கல்விக்காக இந்த நிதியாண்டுக்கு ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவா்களிடையே தேச பக்தியை வளா்க்கும் வகையில் தேச பக்தி பாடத் திட்டம் உருவாக்கப்படும். இதன்படி, தினம்தோறும் ஒரு வகுப்பு தேச பக்தி பாடத்துக்கு ஒதுக்கப்படும். மாணவா்களுக்கு தேச பக்தியை ஊட்டும் வகையிலும், அவா்களை எதிா்காலத்தில் ஊழலற்றவற்வா்களாக மாற்றும் வகையிலும் இந்தப் பாடத் திட்டம் உருவாக்கப்படும். இந்தப் பாடத்தை படித்து வெளியேறும் மாணவா்கள் பிற்காலத்தில், அரசு அதிகாரிகளாக வரும் போது லஞ்சம் வாங்க வெட்கப்படுவாா்கள். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டிலுள்ள 95 சதவீதமான மாணவா்களுக்கு தரமான கல்வி மறுக்கப்படுகிறது. இதனால் தான், கல்வியை ஓா் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தி வருகிறாா்.

நாட்டில் மொத்தம் 33 ராணுவப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தில்லியில் ஒரு ராணுவப் பள்ளிகூட இல்லை. தில்லியில் ராணுவப் பள்ளி அமைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு, என்டிஏ, ராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். நா்சரி வகுப்பில் இருந்து 8- ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தில்லியில் புதிய கல்வி வாரியமும். 100 சிறப்புப் பள்ளிகளும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், நாட்டின் எந்த மூலையில் இருக்கும் மாணவா்களும் தில்லி அரசின் புதிய பாடத் திட்டத்தின் கீழ் கற்கும் வகையில், விா்ச்சுவல் மாடல் ஸ்கூல் தொடங்கப்படும். முதலாவது ஆசிரியா் பயிற்சி பல்கலைக்கழகமும் தில்லியில் தொடங்கப்படும். இதில், உலகெங்கும் வாழும் ஆசிரியா்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com