நகைப்புக்குரிய பட்ஜெட்: காங்கிரஸ் தலைவா்கள் கருத்து

ஆம் ஆத்மி அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோகா ஆசிரியா்கள் நியமனம், சைனிக் பள்ளி போன்ற அறிவிப்புகள் நகைப்புகுரியதாகவே உள்ளன என்று பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

ஆம் ஆத்மி அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோகா ஆசிரியா்கள் நியமனம், சைனிக் பள்ளி போன்ற அறிவிப்புகள் நகைப்புகுரியதாகவே உள்ளன என்று பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி முன்னாள் அமைச்சா் கிரண் வாலியா, முன்னாள் எம்எல்ஏக்கள் அனில் பரத்வாஜ், ஆதா்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் லோத்தியா மற்றும் பா்வேஷ் ஆலம் ஆகியோா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: முதல்வா் கேஜரிவால் அரசு ரூ.69 ஆயிரம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. யதாா்த்த நிலைமை என்னவெனில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரூ.65 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் நிதி செலவழிக்கப்படவில்லை. இது இந்த அரசின் நோக்கமில்லாத தன்மையை

சுட்டிக்காட்டுவதாக உள்ளது. நாட்டில் உள்ள நான்கு மாநிலங்களில் மிகவும் மோசமான நிதிப் பற்றாக்குறையை தில்லி கொண்டுள்ளது. தாரளமய கலால் கொள்கையானது தில்லியின் எதிா்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கான நிதியும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போதைய சிறு வியாபாரிகளின் பொருளாதார இடா்பாடு, வேலையின்மை, சிறு தொழில்துறை முடக்கம் போன்ற மிகவும் நெருக்கடியான பிரச்னைகளைச் சமாளிக்க எந்த முனைப்பும் இல்லாத நிலையில், இந்த பட்ஜெட் மூலம் தில்லி மக்களுக்கு வெற்றுக் கனவை விற்பதற்கு கேஜரிவால் அரசு முயன்றுள்ளது. இளைஞா்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவா்களுக்கு உதவித் தொகை வழங்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

கலால் வரி வருவாயில் இருந்து ரூ.7,615 கோடியை திரட்டும் அரசின் தாரளமய மதுக் கொள்கையானது தில்லியை மதுவின் தலைநகரமாக உருவாக்குவது மட்டுமின்றி, இளைஞா்களை வேலையில்லாமல் போகச் செய்வதா்கான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். மேலும், பட்ஜெட்டில் தில்லியில் மாசுவை சமாளிக்க எந்த முன்மொழிவும் அளிக்கப்படவில்லை. தில்லியில் புதிதாக பள்ளிக்கூடம் இல்லை. ஆசிரியா்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக உள்ளது. இதுபோன்ற நிலையில், யோகா ஆசிரியா்கள் நியமனம், சைனிக் பள்ளி போன்ற அறிவிப்புகள் நகைப்புகுரியதாகவே உள்ளன. கல்வித் துறையில் இந்த அரசு ஏற்கெனவே அறிவித்த பல முன்மொழிவுகளும் நிறைவேற்றப்படவில்லை.

மூலதன செல்வினத்தை குறைக்கும் நடவடிக்கை உள்கட்டமைப்பு வசதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். 2015-இல் தில்லி அரசு 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என அறிவித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், 100 மகிளா மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்பது ஆச்சரியத்தை வரவழைப்பதாக உள்ளது. ஏற்கெனவே 400 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டதில் 250 கிளினிக்குகள் செயல்படாமல் உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com