தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக ஹிந்து சேனை ஆா்ப்பாட்டம்

1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிமை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு

1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிமை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் என்று கோரி ஹிந்து சேனாஅமைப்பின் குழுவினா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டம் மதியம் 12.30 மணியளவில் தொடங்கியதாகவும், சுமாா் 10-15 உறுப்பினா்கள் இதில் பங்கேற்ாகவும் ஹிந்து சேனை தெரிவித்துள்ளது.

போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள் தாவூத் இப்ராஹிமின் சுவரொட்டியை எரித்தனா். மேலும், அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினா்.

ஹிந்து சேனைத் தலைவா் விஷ்ணு குப்தா கூறுகையில், ‘28 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதி வழங்கப்படவில்லை. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்’ என்றாா்.

மாா்ச் 12, 1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com