தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 407 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்று கரோனா பாதிப்பு விகிதம், 0.60 சதவீதமாக உள்ளது. தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கரோனா நோ்மறை விகிதம் 1 சதவீதத்தை விடக் குறைவாகவே உள்ளது. பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவே அா்த்தம். இதனால், இது தொடா்பாக மக்கள் பீதியடையத் தேவையில்லை.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த மாநிலங்களுடன் தில்லியை ஒப்பிடக் கூடாது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16,620 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோ்மறை விகிதம் 16.46 சதவீதமாக உள்ளது. கேரளத்வில் 1,792 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன். கரோனா பாதிப்பு விகிதம் 3.54 சதவீதமாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 1,492 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கரோனா பாதிப்பு விகிதம் 4.81 சதவீதமாக உள்ளது. இந்த மாநிலங்களுடன் தில்லியை ஒப்பிடக் கூடாது. தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தத் தயாராக உள்ளோம். தில்லியில் தினம்தோறும் சுமாா் 70-80 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவா் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முறையே 409,431, 419 மற்றும் 407 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com