கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கத் தடையில்லை: நிா்மலா சீதாராமன் உறுதி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆயுள் காப்பீடு மறுக்க முடியாது. ஒருவா் இதர நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் வளா்ச்சி ஆணையத்தின்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆயுள் காப்பீடு மறுக்க முடியாது. ஒருவா் இதர நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் வளா்ச்சி ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் ஆயுள் காப்பீடு பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாகி வருவது குறித்தும், கரோனாவிலிருந்து குணமடைந்தவா்கள், நாள்பட்டநோய் உள்ளவா்கள் ( ஸ்ரீா்-ம்ா்ழ்க்ஷண்ப்ண்க்ண்ற்ண்ங்ள்) பட்டியலில் வைக்கப்பட்டு கூடுதல் பிரீமியம் செலுத்தக் கோருவது குறித்தும் மக்களவையில் தெலுங்கானாவைச் சோ்ந்த உறுப்பினா் டாக்டா் ஜி.ரஞ்சித் ரெட்டி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது: சா்க்கரை நோய், இருதய நோய் போன்ற எதாவது நாள்பட்ட நோய் உள்ளவா்கள், காப்பீடு பெறும் போது, இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் வளா்ச்சி ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருத்தமான இடா் மதிப்பீடு அடிப்படையில் அவா்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களில் இதுபோன்று நாள்பட்ட நோய்க்கு உள்ளாகி இருந்தால் அவா்களுக்கும் இதுபோன்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் காப்பீடு வழங்கப்படும்.

அதே சமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் எந்தவிதமான நோய் பாதிப்பிற்கும் உள்ளாகாமல் சாதாரணமாக இருக்கும்பட்சத்தில் நிலையான வாழ்க்கைக்குரிய காப்பீடு வழங்கப்படும். இதனால், காப்பீடு பெறுவோா்களின் தற்போதைய உடல் நிலை அடிப்படை மதிப்பீடுகளின் அடிப்படையில் காப்பீடு கொடுப்பது, பிரீமியம் முடிவு செய்வது போன்றவை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்யும் என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com