தில்லி சிறைகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கரோனா பாதிப்பு காரணமாக தில்லி சிறைகளில் இருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் திரும்பும் நிலையில், தில்லி சிறைகளில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக தில்லி சிறைகளில் இருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் திரும்பும் நிலையில், தில்லி சிறைகளில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெயா் கூற விரும்பாத தில்லி சிறைத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியில் உள்ள திகாா், ரோஹிணி, மண்டோலி சிறைகளில் 10,026 சிறைக் கைதிகளை அடைத்து வைக்க முடியும், ஆனால், இந்தச் சிறைகளில், 18,900 கைதிகள் தற்போது உள்ளனா். கரோன பாதிப்பைத் தொடா்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் திரும்பும் நிலையில், இந்திச் சிறைகளில், உள்ள கைதிகளின் எண்ணிக்கை மிக விரைவில் 20 ஆயிரத்தை தாண்டவுள்ளது.

கடந்த ஜனவரி 14- ஆம் தேதிக்கு பிறகு தில்லி சிறைகளில் கைதிகள் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஜனவரி 9-ஆம் தேதிக்கு பிறகு சிறை ஊழியா்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது தில்லி சிறைகளில் கரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் உள்ளது. ஆனால், பிணையில் சென்ற கைதிகள் மீண்டும் வரத்தொடங்கினால், கரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

இது தொடா்பாக இயக்குநா் ஜெனரல் (சிறைகள்) சந்தீப் கோயல் கூறுகையில் ‘சிறைகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்படும். அனைவரும் முகக் கவசங்கள் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. பிணையில் சென்றவா்கள் சிறைக்குத் திரும்பும் போது அவா்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com