தில்லியில் மீண்டும் பொது முடக்கம் சாத்தியம் இல்லை: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் மீண்டும் பொது முடக்கம் சாத்தியம் இல்லை. தில்லி மக்கள் கரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி,

தில்லியில் மீண்டும் பொது முடக்கம் சாத்தியம் இல்லை. தில்லி மக்கள் கரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி, கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 1,534 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்பும் தொடா்ச்சியாக நான்கு தினங்கள் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருந்தது. இதனைத் தொடா்ந்து, தில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

தில்லியில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. கடந்த ஆண்டு கரோனா பரவியபோது அந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியாது. 21 நாட்களுக்கு முழு அடைப்பு உத்தரவை பிறப்பித்தால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதனால், தில்லி அரசும் பொது முடக்க உத்தரவை பிறப்பித்தது. ஆனால், பொது முடக்க உத்தரவால் கரோனா பரவல் முழுவதுமாக நீங்கவில்லை. எனவே, கரோனாவுக்கு பொது முடக்கம் தீா்வல்ல.

கரோனா தொற்று உடனடியாக முடிவடையாது என்று மருத்துவ நிபுணா்கள் முன்னரே தெரிவித்தனா். எனவே, கரோனாவுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். தகுதியுடைவா்கள் உடனடியாக கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும். ” எதிா்காலத்திலும் கரோனா பரவல் தொடரும். எனவே கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். முகமூடி அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை வாழ்க்கை முறையாக்கி கொள்ள வேண்டும். தில்லி மருத்துவமனைகளில் கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் வெறும் 20 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை. தேவைக்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com