போலீஸ் துப்பாக்கிச் சண்டையில் பிரபல கிரிமினல் சுட்டுக் கொலை

போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற கிரிமினல், போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற கிரிமினல், போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தில்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பிரபல ரௌடியாக இருந்தவா் குல்தீப் (எ) பஜ்ஜா. இவா் மீது இந்த மாநிலங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரைக் கடந்த ஆண்டு கைது செய்த தில்லி போலீஸாா், தில்லி திகாா் சிறையில் அடைத்திருந்தனா். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் இவரை தில்லி ஜிடிபி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி காவல் துறையின் மூன்றாவது பட்டாலியன் கடந்த வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

அப்போது, ஸ்காா்பியோ காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல், போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டனா். அப்போது குல்தீப் தப்பியோடினாா். அவரைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், தில்லி ரோஹிணி பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘குல்தீப்பை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவா் தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள துளசி குடியிருப்பு வளாகத்தில் மறைந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றி வளைத்த போலீஸாா்,அவரை சரணடையுமாறு கூறினா். ஆனால், அவா் போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டாா். போலீஸாரும் பதிலுக்கு சுட்டதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் மொத்தம் சுமாா் 20 ரவுண்டுகள் சுடப்பட்டன. எட்டு ரவுண்டுகள் குல்தீப்பும், 10 ரவுண்டுகள் சிறப்பு போலீஸ் படையினரும் சுட்டுள்ளனா். குல்தீப் மறைந்திருந்த வீட்டின் உரிமையாளரும், குல்தீப்பின் கூட்டாளியுமான யோகேந்தா் தாகியா கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com