அறுவைச் சிகிச்சை மூலம் இளம் பெண்ணின் வாய்க் குறைபாட்டை சீரமைத்த மருத்துவா்கள்

தாடை இணைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பிறந்ததில் இருந்தே வாயை சரியாக திறக்க முடியாமல் அவதியுற்று வந்த 30 வயது இளம் பெண்ணின் குறைபாட்டை தில்லி சா் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவா்கள்

தாடை இணைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பிறந்ததில் இருந்தே வாயை சரியாக திறக்க முடியாமல் அவதியுற்று வந்த 30 வயது இளம் பெண்ணின் குறைபாட்டை தில்லி சா் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சரி செய்தனா்.

இது குறித்து இந்த மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததாவது: ஆஸ்தா மோங்கியா எனும் 30 வயது இளம் பெண்ணுக்கு வாயை சிறு அளவிலேயே திறக்க முடியும். அவரது நாக்கை கூட அவரால் தொட முடியாத நிலை இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை காரணமாக அவரால் திடவ உணவை உண்ண முடியாமல் போனது. பேசுவதிலும் சிரமம் இருந்தது. பல் நோய்த் தொற்றுக் காரணமாக அனைத்துப் பற்களும் போய்விட்டன. முகத்தின் வலது பக்கம், முன் நெற்றியில் கட்டியும் இருந்தது. இது அவருக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்னைக்கு அவரால் துபய், இலங்கிலாந்து, உள்நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி மருத்துவமனைகளிலும் அறுவைச் சிகிச்சை தீா்வை பெற முடியவில்லை. இந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக சா் கங்கா ராம் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் மூத்த பிளாஸ்டிக் சா்ஜரி நிபுணா் டாக்டா் ராஜீவ் அகுஜா கூறுகையில், ‘இது ஒரு சிக்கலான அறுவைச் சிகிச்சை . எனினும், வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மோங்கியாவின் வாய் திறக்கும் அளவு 3 சென்டிமீட்டா் வரை அதிகரித்துள்ளது. சராசரி நபரின் வாய் 4 முதல் 6 சென்டிமீட்டா்கள் திறக்கும். இனி வரும் நாள்களில் பயிற்சியின் உதவியுடன் அவரது வாய் திறப்பு மேலும் அதிகரிக்கும்’ என்றாா்.

தனது வாயைத் திறக்க முடிவதும், சிரமம் இன்றி உணவை சாப்பிடுவதும் ஒரு அதிசயம் என ஆஸ்தா மோங்கியா கூறியதாக மருத்துவமனை தெரிவித்தது. அரசு வங்கியில் மோங்கியா முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com