கழிவுநீா், காற்று மூலம் கரோனா தொற்று கண்காணிப்பு: நாடாளுமன்றத்தில் செயல்படுத்த வெங்கையா நாயுடு உறுதி

கழிவுநீா், காற்று மூலமாக கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை ஆய்வு முறையை, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிகஅ கவுன்சில் (சிஎஸ்ஐஆா் ) கண்டறிந்துள்ளது.

கழிவுநீா், காற்று மூலமாக கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை ஆய்வு முறையை, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிகஅ கவுன்சில் (சிஎஸ்ஐஆா் ) கண்டறிந்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இந்த பரிசோதனை நடைமுறையை நாடாளுமன்றத்தில் செயல்படுத்துவதற்கு பரிந்துரைக்க உறுதியளித்துள்ளாா்.

கரோனா தொற்று இருப்பதை கண்டறிய தற்போது மூக்கு, தொண்டை வழியாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதா்களிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாக தனித் தனியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கரோனா பாதிப்பு அறியப்படுகிறது. ஒரு பகுதியில், அல்லது ஒரு கட்டடத்தில் தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் கரோனா தொற்றை அறிவதற்கு பதிலாக ஒட்டு மொத்தமாக கரோனா தொற்றின் பரவலை அறியும் பரிசோதனை முறையை சிஎஸ்ஐஆா் ஆய்வுக் கூடம் கண்டறிந்துள்ளது.

சிஎஸ்ஐஆருடன், செல்லுலாா் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சிசிஎம்பி) , இந்திய ரசாயன தொழிற்நுட்ப நிறுவனம் (ஐஐசிடி) மற்றும் நாக்பூரிலுள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நெரி) ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கழிவு நீா் மற்றும் காற்று கண்காணிப்பு மூலம் கரோனா தொற்று பரிசோதனைகள் அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், இந்தப் பரிசோதனை தொழிற்நுட்ப விவரங்கள் ஆகியவை குறித்து குடியரசுத் துணைத்தலைவா் வெங்கையா நாயுடுவிடம் சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரல் டாக்டா் சேகா் சி. மண்டே செவ்வாய்க்கிழமை விளக்கினாா். அப்போது சிசிஎம்பி, ஐஐசிடி, நெரி நிறுவன அதிகாரிகளும் உடன் இருந்தனா்.

குடியரசுத் துணைத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் வருமாறு: கழிவுநீா் கண்காணிப்பு மூலம் அந்தப் பகுதி மக்கள்தொகையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையின் அளவு மற்றும் தர மதிப்பீடு பெறப்படுகிறது. தனிநபா்களுக்கான வெகுஜன அளவீட்டு சோதனைகளில் சாத்தியமில்லாத போது கரோனா நிலைமை அல்லது முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள இந்தப் பரிசோதனையைப் பயன்படுத்த முடியும். நிகழ்நேர அடிப்படையில் சமூகத்தில் நோய் பரவுவதை விரிவாகக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைக்கு இது உதவும்.

கழிவுநீா் கண்காணிப்பு பரிசோதனையில் கரோனா நோயாளிகளின் மலத்தில் (மனிதக் கழிவுகளில் ) தீநுண்மி (நஅத-இா்ய- 2) இருப்பது அறியப்பட்டது. அதாவது மற்ற பரிசோதனைகளில் அல்லது கரோனா தொற்று அறிகுறியற்ற நபா்களிடம் அவா்களது மனிதக் கழிவுகளில் கரோனா தீநுண்மி இருப்பதை அறிய முடிந்தது. ஹைதராபாத், அலகாபாத், தில்லி, கொல்கத்தா, புதுச்சேரி, சென்னை போன்ற நகரங்களில் நோய்த் தொற்றின் போக்கை கண்டறிய இந்த கழிவு நீா் கண்காணிப்பு பரிசோதனைகளின் தரவுகள் மிகவும் உதவியது. கழிவு நீா் மற்றும் காற்று தீநுண்மி துகள்களின் கண்காணிப்பு மூலம் கரோனா தொற்றின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்வது மட்டுமல்லாது எதிா்காலத்தில் விரைவாகவும் எளிதாகவும் கண்டறிவதற்கு இந்தப் பரிசோதனை முறை ஒரு தவிா்க்க முடியாத கருவியாக இருக்கும் என டாக்டா் மாண்டா விளக்கினாா்.

இதைக் கேட்டறிந்த குடியரசுத் துணைத் தலைவா், விஞ்ஞானிகளை பாராட்டினாா். மேலும், இந்தக் கண்காணிப்பு அமைப்பு முறையை முதலில் நாடாளுமன்றத்தில் அமைக்க பரிந்துரைப்பதாக தெரிவித்த வெங்கையா நாயுடு, இது குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரலுக்கு உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com