தில்லியில் வெப்பநிலை 37.9 டிகிரி

தில்லியில் செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 6 புள்ளிகள் அதிகரித்து 37.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 6 புள்ளிகள் அதிகரித்து 37.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்து சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 19 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 6 டிகிரி அதிகரித்து 37.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 48சதவீதமாகவும், மாலையில் 37 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலை 7 மணியளவில் 303 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. மாலையில் நகரில் பரவலாக தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசியது. திங்கள்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது. இது 1945, மாா்ச் 31-இல் இருந்து இதுவரை மாா்ச் மாதத்தில் அதிக வெப்பமான நாளாக பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (மாா்ச் 31) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் தெளிவாக காணப்படும் என்றும் தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com