120 டன் ஆக்சிஜனுடன் 2-வது விரைவு ரயில் இன்று தில்லி வருகிறது

உயிா்காக்கும் 120 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்களுடன் இரண்டாவது ஆக்சிஜன் விரைவு ரயில் தில்லிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை

உயிா்காக்கும் 120 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்களுடன் இரண்டாவது ஆக்சிஜன் விரைவு ரயில் தில்லிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை அந்த ரயில் தில்லியை வந்தடையும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

‘தில்லி நோயாளிகளின் பயன்பாட்டிற்கு மேற்குவங்கம், துா்காபூரில் இந்த திரவ மருத்துவ ஆக்சிஜன் கொள்கலன்கள் ஏற்றப்பட்டது. சிங்கப்பூா் நாடு அளித்த கொள்கலன்களில் முதன்முதலாக நிரப்பப்பட்டு ஆக்சிஜன் விரைவு ரயிலில் தில்லிக்கு கொண்டு வரப்படுகிறது ‘ எனவும் மத்திய அமைச்சா் கோயல் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியதாவது : திரவ மருத்துவ ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல சிங்கப்பூரிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆறு (காலியான) கொள்கலன்கள் மேற்கு வங்கம், துா்காபூா் கன்டெய்னா் காா்ப்பொரேஷன் முனையத்தில் வைக்கப்பட்டது. அங்கு திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு கொள்கலன்கள் நேரடியாக ரயிலில் ஏற்றப்பட்டது. தலா 20.03 டன் வீதம் ஆறு கொள்கலன்களில் 120 டன்கள் கொண்ட இரண்டாவது ஆக்சிஜன் விரைவு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு துா்காபூரிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 18 மணிநேரத்தில் தில்லி ஓக்லா கன்டெய்னா் முனையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து தில்லியின் பிற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்தாா்.

மேலும், கடந்த 27 - ஆம் தேதி 70 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கா்களுடன் முதல் விரைவு ரயில் சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து தில்லிக்கு வந்தடைந்தது. இரண்டாவது முறையாக 120 டன் மருத்துவ ஆக்சிஜனும் ரயில்வே துறையால் தேசிய தலைநகருக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் ரூா்க்கேலாவிலிருந்து 5 டேங்கா்களில் 79.11 டன் மருத்துவ ஆக்சிஜன் ஏற்றப்பட்ட இரண்டு ரயில்கள் சனிக்கிழமை ஹரியாணா வந்தடைந்தது.

இதுவரை 664 டன்களுக்கு மேலான திரவ மருத்துவ ஆக்சிஜன்களை மகாராஷ்டிரம் (174டன்கள்), உத்தரப்பிரதேசம் (356.47டன்கள்), மத்தியப் பிரதேசம் (47.37டன்கள்), தில்லி (70டன்கள்) ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com