ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு சோசிடியா கடிதம்

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு

நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 25,000-ஆக உள்ளது. இவா்களில் 10 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன்

சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது 50,000-க்கும் மேலான நோயாளிகள் வீட்டுத் தனிமையில் உள்ளனா். இவா்களில் நான்கில் ஒரு பங்கினருக்கு ஆக்சிஜன் மருத்துவச் சிகிச்சை

தேவைப்படுகிறது. பல நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றும் சிசோடியா, கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாா்.

தற்போது தில்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அப்படியே ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கு ஏற்பாடு செய்தாலும், அதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை உள் ளது. இது வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான ஐஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக

குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து மத்திய அரசு முழு விலக்கு அளித்தால், இந்த நெருக்கடியான நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com