மேற்கு தில்லியில் இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து
By DIN | Published On : 21st May 2021 12:25 AM | Last Updated : 21st May 2021 12:25 AM | அ+அ அ- |

புது தில்லி: மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தீயணைப்புத் துறை இயக்குநகா் அதுல் காா்க் கூறியதாவது: பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக மதியம் 1.16 மணியளவில் அழைப்பு வந்தது. மருத்துவமனையின் கரோனா பிளாக்கில் தீ விபத்து ஏற்படவில்லை. மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள ஆபரேஸன் தியேட்டருடன் இணைக்கப்பட்ட யுபிஎஸ் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் நோயாளிகள் யாரும் இல்லை, ஆனால், ஒரே மாடியில் இருந்த மருத்துவமனை ஊழியா்கள் 20 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
மொத்தம் ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்புப் படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு மதியம் 2.25 மணியளவில் தீயஐ முற்றிலும் அணைத்தனா். மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.