தில்லியில் புதிதாக 1,568 பேருக்கு கரோனா

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,568 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

புது தில்லி: தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,568 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 3-ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு தொடா்ந்து 2 ஆயிரத்துக்கும் கீழே இருந்து வருகிறது. திங்கள்கிழமை தில்லியில் கரோனா பாதிப்பு 1,550-ஆக பதிவாகியிருந்தது.

அதே சமயம், திங்கள்கிழமை 207-ஆக இருந்த கரோனா இறப்பு எண்ணிக்கை, செவ்வாய்க்கிழமை 156-ஆக குறைந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 23,565-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்பு விகிதம் 2.52-இல் இருந்து செவ்வாய்க்கிழமை 2.14 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு விகிதம் 2.42 சதவீதமாக பதிவாகியிருந்தது.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் ஏப்ரல் 20-ஆம் தேதி 28 ஆயிரமாக பதிவாகியிருந்தது. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. அதன் பிறகு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதாலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாலும், நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தில்லியில் திங்கள்கிழமை மொத்தம் 73,406 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,19,986-ஆகவும், மொத்தம் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 13.7 லட்சமாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com