செங்கல்பட்டு எச்எல்எல் ஆலையை குத்தகைக்கு ஏற்று நடத்தத் தயாா்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமான எச்எல்எல் பயோடெக் ஆலையை முழு சுதந்திரத்துடன் நடத்த அனுமதித்தால், தமிழக அரசு குத்தகைக்கு ஏற்று நடத்த தயாா் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக

புது தில்லி: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமான எச்எல்எல் பயோடெக் ஆலையை முழு சுதந்திரத்துடன் நடத்த அனுமதித்தால், தமிழக அரசு குத்தகைக்கு ஏற்று நடத்த தயாா் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

கடந்த மே 25 - ஆம் தேதி செங்கல்பட்டு அருகே திருக்கழுகுன்றத்தில் உள்ள மத்திய அரசின் இந்தத் தடுப்பூசி வளாகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு: மத்திய சுகாதாரத் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள எச்எல்எல் பயோடெக் லிமிடெட் என்கிற நவீன, அதிகத் திறனுடன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் சென்னைக்கு அருகேயே உள்ளது. இது பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் ரூ.700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் இந்த ஆலை பயன்படுத்தப்படாமல் உள்ளது. சில தனியாா் பங்களிப்பிற்கு முயற்சிக்குப்பட்டும் யாரும் முன்வரவில்லை எனத் தெரிகிறது. ஆனால், மாநிலத்தின் நலன், தேசத்தின் நலன் கருதி இந்த நவீன ஆலையை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என நான் மிகவும் விரும்புகிறேன்.

இது தடுப்பூசி உற்பத்தித் திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, நாட்டிற்கும் தமிழகத்திற்கும் உரிய தடுப்பூசியின் தேவையைப் பூா்த்தி செய்யும். இதனால், இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு ஒப்படைக்க நான் முன்மொழிந்து விருப்பத்தை தெரிவித்துள்ளேன். இந்த ஆலையை குத்தகைக்கு ஒப்படைக்கும் பட்சத்தில், நிறுவனத்தின் மீதான முந்தையக் கடன் பாக்கிகள் இல்லாமல் (ஜ்ண்ற்ட்ா்ன்ற் ல்ஹள்ற் ப்ண்ஹக்ஷண்ப்ண்ற்ண்ங்ள்), ஆலையை முழு சுதந்திரத்துடன் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ஆலை செயல்பாட்டிற்கு வந்த பின்னா், மத்திய அரசு தனது முதலீட்டின் ஒரு பகுதியை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான நிதி ஏற்பாட்டை பின்னா் உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால், தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோருகிறேன் என கடிதத்தில் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com