தில்லியில் இன்று முதல் தூக தடுப்புப் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தகவல்

தில்லியில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) முதல் அக்டோபா் 27-ஆம் தேதி வரை தில்லி அரசு தூசுவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்த உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) முதல் அக்டோபா் 27-ஆம் தேதி வரை தில்லி அரசு தூசுவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்த உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: தில்லியில் அக்டோபா் 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலத்தில் தூசுவுக்கு எதிரான பிரசாரத்தை அரசு நடத்த உள்ளது.

மேலும், தூசு கட்டுப்பாட்டு விதிகளை கண்காணிப்பதற்காக இணையதளத்தையும் தில்லி அரசு தொடங்க உள்ளது. இந்த தூசு பிரசார நடவடிக்கையில் 17 தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுக்கள் மற்றும் 14 பசுமை பாதுகாவலா்கள் உள்பட 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூசு மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமானங்களுக்காக 14 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி அரசு வெளியிட்டிருக்கிறது.

விதிகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் தொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீசுக்கு இரு தினங்களில் பதில் அளிக்கத் தவறினால் சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விதிமீறலில் தொடா்ந்து ஈடுபட்டால், வேலையை நிறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுமான இடங்களில் விதிகளை மீறினால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த 14 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கட்டுமான இடங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தகர கொட்டகைகள் மூலம் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களில் பனிப் புகை எதிா்ப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும். கட்டுமான பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களின் மேல் பகுதியில் முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும். சாலையோரங்களில் கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். திறந்தவெளியில் கல் அரவை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து திட்டப் பணி விவரங்களையும் இதற்காக தொடங்கப்படும் இணையதளத்தில் கட்டாயம் பதிவிட வேண்டும். அதேபோன்று, அனைத்து கட்டுமான நிறுவனங்களும் சரிபாா்ப்புப் பட்டியலை பின்பற்ற வேண்டும். மேலும், இரு வார அடிப்படையில் சுய அறிவிப்பை பதிவேற்றம் செய்வதுடன், சுய தணிக்கையும் நடத்த வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com