தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா பாதிப்பு: ஒருவா் உயிரிழப்பு

தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்று விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மாதம் 5 போ் கரோனாவுக்கு உயிரிழந்தது நினைவிருக்கும். புதிதாக 29 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை அடுத்த இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 14,39, 195- ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 14.13 லட்சம் போ் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். மேலும் கரோனாவுக்கு இதுவரை 25,089 பலியாகியுள்ளனா்.

தில்லியில் சனிக்கிழமை மொத்தம் 58,989 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவா்களில் 43,135 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறை மூலம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 347 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 97 போ் வீட்டுத்தனிமையில் உள்ளனா். 102 மண்டலங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com