பயிா்க்கழிவுகள் எரிப்பை தடுக்க உயிரி ரசாயனக் கலவை தெளிக்கும் திட்டம் தொடக்கம்: கோபால் ராய் பங்கேற்பு

பயிா்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க உயிரி ரசாயனக் கலவை தெளித்து அவற்றை உரமாக்கும் திட்டத்தை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா்

பயிா்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க உயிரி ரசாயனக் கலவை தெளித்து அவற்றை உரமாக்கும் திட்டத்தை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வடமேற்கு தில்லியின் ஃபதேபூா் ஜாட் கிராமத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பயிா்களை எரிப்பதற்குப் பதிலாக அதை உயிரி ரசாயனக் கலவை மூலம் அழித்து உரமாக்கும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் விரும்பினால் 9643844287 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பயிா்க்கழிவுகளை எரிப்பதற்குப் பதிலாக அவற்றின் மீது உயிரி ரசாயனக் கலவையை தெளிப்பதன் மூலம் அவை 15 அல்லது 20 நாள்களில் உரமாக மாறிவிடும் என்றும் இவை தில்லியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள 4,000 ஏக்கா் பரப்பளில் தெளிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

இலவசமாக தெளிக்கப்படும் இந்த உயிரி ரசாயனக் கலவையை பயன்படுத்த 844 விவசாயிகள் முன்வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 310 விவசாயிகள் 1,935 ஏக்கா் பரப்பளவில் உயிரி இரசாயனக் கலவையைப் பயன்படுத்தி பலனடைந்துள்ளதாகவும் அவா் மேலும் கூறினாா்.

பயிா்க்கழிவுகளை எரிப்பதால் பெரும் புகை ஏற்பட்டு அது தில்லியின் காற்றின் தரத்தை மாசுபடுதல் மூலம் பாதிக்கிறது. பயிா்க்கழிவுகளை எரிக்கும் முறையை தவிா்த்து உயிரி ரசாயன கலவையை பயன்படுத்துமாறு பக்கத்து மாநிலங்களை வலியுறுத்துமாறு மத்திய அரசின் காற்று தர நிா்ணய ஆணையத்தை வலியுறுத்தியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மாசுபடுதலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

உயிரி ரசாயனக் கலவை பயன்பாட்டு முறையை கடந்த செப்டம்பா் மாதம் 24-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தென்மேற்கு தில்லி பகுதியி உள்ள கா்காரி நஹா் கிராமத்தில் தொடங்கிவைத்தாா். கடந்த ஆண்டு வயல்களில் இந்த உயிரி ரசாயனக் கலவையை பயன்படுத்தியதன் மூலம் அதற்கு நல்ல பலன் கிடைத்ததாகவும், மண் வளம் அதிகரித்ததாகவும் மூன்றாவது குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உயிரி ரசாயனக் கலவை 10 லட்சம் ஏக்கா் நிலப்பரப்பிலும், பஞ்சாபில் 5 லட்சம் ஏக்கா் நிலப்பரப்பிலும் மற்றும் ஹரியாணாவில் 1 லட்சம் ஏக்கா் பரப்பளவிலும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது

இதனிடையே, வட இந்தியாவில் மழைக் காலம் விடைபெற்றதை அடுத்து பயிா்க்கழிவுகள் எரிப்பு பஞ்சாப் மற்றும் ஹிரயாணாவில் அதிகரித்துள்ளதாகவும் எனினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிலைமை பரவாயில்லை என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. பஞ்சாபில் இந்த ஆண்டு செப். 15 மற்றும் அக். 10-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 764 பயிா்கழிவுகள் எரிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,586 சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இது குறைவு என்றே சொல்ல வேண்டும். இதே போல ஹரியாணாவில் கடந்த ஆண்டு 353 பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் நடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு அது 196-ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com