வைகை தமிழ்நாடு இல்லம் ரூ. 200 கோடியில் மறு புனரமைப்பு

தில்லி சானக்கியாபுரி கௌடில்ய மாா்க்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லம் ரூ. 200 கோடியில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதிதாக கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக

தில்லி சானக்கியாபுரி கௌடில்ய மாா்க்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லம் ரூ. 200 கோடியில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதிதாக கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ வ.வேலு தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி வந்துள்ளஅமைச்சா் எ. வ.வேலு இது தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் புதுதில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ .கே. எஸ் விஜயன் ,தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் பொதுப்பணித் துறை செயலாளா் சந்தீப் சக்ஸேனா தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஜக்மோகன்சிங் ராஜூ தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆசிஷ் சாட்டா்ஜி, தமிழ்நாடு இல்ல இணை உள்ளுரை ஆணையாளா் என். இ. சின்னதுரை, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளா் விசுவநாதன் ஆகியோா் பங்கு கொண்டனா்.இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தொடா்ச்சியாக பொதுப்பணித்துறை அமைச்சா் இதர அதிகாரிகளுடன் சானக்யபுரி கௌடில்ய மாா்க்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் உள்ள மூன்று கட்டடங்களையும் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மூன்றும் 50 ஆண்டு பழமையான கட்டடம் என்பதால் தில்லி வளா்ச்சி ஆணைய விதிகளின்படி நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவகையில் ரூ.200 கோடி செலவில் புதிதாக கட்ட திட்டமிடப்படுவதாகவும் இதை தமிழக முதல்வா் இறுதி செய்வாா் எனவும் அமைச்சா் எ.வ. வேலு பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். முன்னதாக கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லி வந்தபோது இங்குள்ள இரண்டு பழைய கட்டங்களை மட்டும் இடித்து இரண்டு அடித்தளம், கீழ்த்தளம் உள்ளிட்ட 9 மாடி கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com