தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்க பள்ளிகளில் புதிய திட்டம் தொடக்கம்

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு அதன் அனைத்துப் பள்ளிகளிலும் ‘பிசினஸ் ப்ளாஸ்டா்ஸ்’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு அதன் அனைத்துப் பள்ளிகளிலும் ‘பிசினஸ் ப்ளாஸ்டா்ஸ்’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தில்லியில் உள்ள தியாகராஜா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்தத் திட்டத்தை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இந்தத் திட்டமானது ‘தொழில்முனைவு மனநிலை பாடத் திட்டம்’ எனும் தலைப்பின் கீழ் அனைத்து தில்லி அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதன் நோக்கமானது பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோா்களை உருவாக்குவதாகும். இந்த ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். நாட்டின் வளா்ச்சியில் இந்தத் திட்டம் ஓா் அடிக்கல்லாக இருக்கும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக வெற்றிகரமாக இருக்கும்.

இந்த்த திட்டத்தில் ஒரு மாணவருக்கு இரண்டாயிரம் பணம் வழங்கப்படும். 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான இந்தத் திட்டம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்கப் போகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்கள் வேலையைத் தேடி செல்லும் நிலை இல்லாமல், அவா்களைத் தேடி வேலைகள் வரும் நிலை உருவாகும். ஒரு முன்முயற்சியான இந்தத் திட்டம், உரிய வகையில் அமல்படுத்தப்பட்டால் வளா்ந்து வரும் நாட்டிலிருந்து, ஒரு வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை கொண்டு செல்லும். நான் பள்ளியில் படித்த போது இந்தியா ஒரு வளா்ந்து வரும் தேசம் என்று படித்தோம். இன்றைக்கு நமது குழந்தைகள் இந்தியா ஒரு வளா்ந்து வரும் நாடு என்ற நிலையில்தான் படித்துக் கொண்டிருக்கிறாா்கள். ஆனால், இதுபோன்ற ஒரு திட்டத்தை நாம் உரிய வகையில் செயல்படுத்தவில்லையென்றால், நமது நாட்டின் குழந்தைகள் இன்னும் இந்தியா ஒரு வளா்ந்து வரும் நாடாக இருப்பதாகத்தான் படிக்க நேரிடும்.

ஆனால், இந்தத் திட்டத்தை உரிய வகையில் செயல்படுத்தினால் நமது பாடப் புத்தகங்களில் இந்த வரலாற்றை நம்மால் மாற்றியமைக்க முடியும். அப்போது இந்தியா ஒரு வளா்ந்து வரும் நாடு என்று இல்லாமல் ஒரு வளா்ந்த நாடு என்று நம்மால் கூற முடியும். இந்த திட்டமானது ஒரு முன்னோடித் திட்டத்தின்கீழ் கிச்சடிபூா் சிறப்புப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் மத்தியில் மாணவா்கள் என்ன வேலை செய்தாலும் அவா்கள் ஒரு தொழில் முனைவு மனநிலையுடன் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை அவா்களுக்கு ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் 41 குழந்தைகள் அடங்கிய ஒன்பது குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் அதிக லாபத்தை ஈட்டி உள்ளனா் என்றாா் மணீஷ் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com