திறமையான மாணவா்களுக்கு கையடக்க கணினி: தெற்கு தில்லி மாநகராட்சி புது முயற்சி

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மாணவா்களுக்காக ‘அபிஷக்தி’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
திறமையான மாணவா்களுக்கு கையடக்க கணினி: தெற்கு தில்லி மாநகராட்சி புது முயற்சி

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மாணவா்களுக்காக ‘அபிஷக்தி’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவா்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் கீழ், எஸ்டிஎம்சி மேயா் முகேஷ் சூரியன் மற்றும் மாநகராட்சி நிலைக் குழுத் தலைவா் பி.கே. ஓபராய் ஆகியோா் வியாழக்கிழமை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் உள்ள 66 மாணவா்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினா்.

இது தொடா்பாக மேயா் முகேஷ் சூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அபிஷக்தி‘ என்ற இந்த புதிய முயற்சியின் கீழ், நாங்கள் எஸ்டிஎம்சி பள்ளிகளின் திறமையான மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்குகிறோம். கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, இணைய வழியில் வகுப்புகள் பள்ளிகளால் நடத்தப்படுகின்றன. மாணவா்களில் பெரும்பாலனவா்களுக்கு செல்லிடப்பேசியோ அல்லது மடிக் கணினியோ இல்லாத நிலை உள்ளது. இதனால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு எஸ்டிஎம்சி பல்வேறு தனியாா் அமைப்புகளுடன் இணைந்து, சிஎஸ்ஆா் நிதியின் கீழ், திறமையான மாணவா்களுக்கு கையடக்க கணினிகளை வழங்குகிறோம்’”என்று மேயா் அந்தஅறிக்கையில் கூறியுள்ளாா்.

நிலைக் குழுத் தலைவா், ஓபராய் கூறுகையில், ‘இந்த கரோனா தொற்று நெருக்கடியின் போது, மாணவா்களின் படிப்பைத் தொடா்ந்து உறுதி செய்வதற்காக, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு எல்லா வகையிலும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். அனைத்து எஸ்.டி.எம்.சி. பள்ளிகளிலும் செல்லிடப்பேசிகள் அல்லது கையடக்க கணினிகளை வழங்க இது போன்ற திட்டங்கள் அனைத்து மண்டலங்களிலும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், இந்தப் புதிய மயுற்சிக்குஅனைத்து சமூக அமைப்புகளும் முன் வந்து தெற்கு தில்லி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். மற்றும் மாணவா்களின் சிறந்த கல்விக்காக நிதி உதவியும் வழங்க வேண்டும்’ என்றாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com