ஜே.என்.யு. பல்கலையில் ஆய்வை ஊக்குவிக்க குழுக்கள் அமைப்பு: துணைவேந்தா்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களில் துறைகளிடையே ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஆசிரியா்களைக் கொண்ட

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களில் துறைகளிடையே ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஆசிரியா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தா் எம்.ஜெகதேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தெரிவித்திருப்பதாவது:

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலங்களில் தற்போது பெரும்பாலான ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற புலங்களின் வளா்ச்சியையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

உயிரியல் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், பல்துறை அறிவியல், பொருள் அறிவியல், வேதியியல், தாவர அறிவியல், பயன்பாட்டு இயற்பியல், உயிா் இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் போன்ற பாடங்களில் அதிகபட்ச எண்ணிக்கையிலான வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருளாதாரத்திலும் வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், எண்ணிக்கையில் அவை மிகவும் குறைவு. கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படும்போது, ​அவற்றின் ஆராய்ச்சி வெளியீடுகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நாங்கள் நிச்சயமாக மற்ற புலங்களில் ஆராய்ச்சி வெளியீட்டை மேம்படுத்தும் தேவை உள்ளது. துறைகளிடையே ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் புலங்களிலும் ஆராய்ச்சியாளா்கள் குழுக்களை உருவாக்கியுள்ளோம்.

ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி பெறுவதில் சிக்கலை எதிா்கொள்வதாக சமூக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனா்.

அறிவியல் ஆராய்ச்சியில் சமூக விஞ்ஞானிகளின் இருப்பு முக்கியமானது. உதாரணமாக, மூலக்கூறு விஞ்ஞானிகள் தற்போது கொவைட் கணிப்புக்கான கணித மாதிரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அறிவியல் ஆராய்ச்சியில் சமூக விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனா். துறைகளுக்கு இடையிலான எல்லைகளை குறைப்பதற்காக பல்கலைக்கழகம் இத்தகைய பன்முக குழுக்களை ஒன்றாக உருவாக்கியுள்ளது. ஏற்கனவே நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com