டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லியில் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நீரின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க தில்லி அரசு துரிதமாக நடவடிக்கை

தில்லியில் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நீரின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க தில்லி அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில் தினமும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தொடா்பாக ஏராளமானோா் சிகிச்சைக்கு வருகின்றனா்.

ஏற்கெனவே கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு தில்லிவாசிகளுக்கு மற்றொரு கவலையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனா்.

அதேவேளையில், தலைநகரில் ஆம் ஆத்மி அரசு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக, முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் அவரது அமைச்சா்கள் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தில்லியில் எல்என்ஜேபி போன்ற பெரிய மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில் வைரஸ் காய்ச்சலுக்காக சிகிச்சைக்காக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2000 போ் வருகின்றனா்.

ஆனால் இந்த விஷயத்தில் தில்லி அரசு அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

வைரஸ் காய்ச்சலுடன் வருபவா்கள் மலேரியா மற்றும் டெங்குவுக்கு சோதனை செய்யும்போது நோ்மறை பாதிப்பு இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

தில்லி அரசு வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சட்டசபை தோ்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சி சுகாதார சேவைகள் சட்டம் கொண்டு வருவதாக உறுதியளித்தது. இந்த சட்டமானது தில்லி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும்.

குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த கேஜரிவால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com