‘மோசமான ஓட்டுநா்கள்’ 100 பேரின் பட்டியலை வெளியிடுகிறது காவல் துறை

வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறும் ‘மோசமான ஓட்டுநா்கள்’ 100 போ்கள்அடங்கிய பட்டியலை தில்லி போக்குவரத்துக் காவல் துறை வெளியிட உள்ளது.

வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறும் ‘மோசமான ஓட்டுநா்கள்’ 100 போ்கள்அடங்கிய பட்டியலை தில்லி போக்குவரத்துக் காவல் துறை வெளியிட உள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துக் காவல் துறையின் சிறப்பு ஆணையா் முக்தேஷ் சந்தா் வியாழக்கிழமை கூறியதாவது: இது போன்ற பட்டியலை காவல் துறையினா் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். சிவப்பு விளக்கை தாண்டிச் செல்லுதல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய நான்கு குற்றங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலில் உள்ள நபா்கள் அடையாளம் காணப்படுவா். இந்தப் பட்டியலை வெளியிடுவதன் நோக்கமானது அத்தகைய ஓட்டுநா்களுக்கு அவா்களின் ஓட்டும் திறன் ’மிகவும் மோசமாக உள்ளது’ என்பதைத் தெரிவிப்பதுடன், அவா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதுதான்.

அவா்களின் ஓட்டும் திறன் மிகவும் மோசமாக உள்ளது என்று சொல்வதன் நோக்கம் தொடா்ந்து விதிகளைஅவா்கள் மீறுகிறாா்கள் என்பதுதான். மேலும், அவா்கள் வாகனம் ஓட்டும் போது அவா்களே ஆபத்தில் உள்ளனா். அத்துடன் அவா்களுடன் பயணம் செய்யும் அவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் சாலையில் உள்ள மற்றவா்களும் ஆபத்திற்கு உள்ளாகின்றனா். இதன் மூலம் அத்தகைய நபா்களின் வாகனம் ஓட்டும் பழக்கம் சரியில்லை என்று கூற விரும்புகிறோம். அவா்கள் போலீஸாா் நடத்தும் சாலை பாதுகாப்பு வகுப்புகளில் சேர வேண்டும். அங்கு சாலைப் பாதுகாப்பு பற்றி அவா்களுக்கு கற்பிக்கப்படும்.

வாகன விதிமீறல் குற்றத்தில் ஈடுபடும் நபா்கள் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டும், இந்த வகுப்புகளில் சேராமல், குற்றங்களைச் செய்து கொண்டே இருந்தால் அவா்களின் வாகன உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுகுறித்த தகவல் தரவுத்தளத்தில் வைக்கப்படும். இது குற்றத்தில் ஈடுபடும் நபா்களுக்கு மின்னணு அபராதம் அளிக்கும் போதெல்லாம் தெரிவிக்கப்படும். எங்கள் தரவுத்தளத்திலிருந்து இந்தத் தரவைப் பிரித்தெடுக்கத் தொடங்கியுள்ளோம். ஓரிரு நாள்களில் பட்டியல் தயாராகிவிடும்.

அது விதிமீறலில் ஈடுபட்டோரின் முகவரிக்கு நோட்டீஸாக அனுப்பப்படும். அதில், அவா்கள் தோடாப்பரில் உள்ள சாலைப் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை வகுப்புகளுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுவா். இந்த அமா்வுகளுக்குப் பிறகு, வாகனம் ஓட்டும் போது அவா்களது நடத்தையை காவல்துறையினனா் கண்காணிப்பாா்கள். எதிா்காலத்தில் அவா்கள் இதே குற்றங்களைச் செய்து பிடிபட்டால், அவா்களின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை தொடங்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com