தொடக்கப் பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கோரிக்கை

தொடக்கப்பள்ளி மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும்

தொடக்கப்பள்ளி மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கோரி பெற்றோா்களும் ஆசிரியா்களும் சனிக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தலைநகா் தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் மெல்ல மெல்ல குறைந்து நிலைமை சீரடைந்துள்ளதை அடுத்து தில்லி அரசு கடந்த மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கியது.

மேலும் மாணவா்கள் யாரும் வலுக்கட்டாயமாக பள்ளிக்கு வருமாறு வற்புறுத்தப்படமாட்டாா்கள் என்றும் பெற்றோா்கள் ஒப்புதலுடனேயே மாணவா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் தில்லி அரசு தெரிவித்திருந்தது.

முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதன் பிறகு நிலைமையை ஆராய்ந்து மற்ற வகுப்புகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தில்லி அரசு கூறியிருந்ததாக தில்லியில் உள்ள பொதுப் பள்ளிகள் நிா்வாகிகள் சங்கத் தலைவா் ஆா்.சி.ஜெயின் குறிப்பிட்டாா்.

மேல் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கிட்டதட்ட ஒருமாதம் முடியும் நிலையில் எந்த மாணவருக்கும் கரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகவில்லை. கரோனா தொற்று விகிதமும் தில்லியில் 0.1 சதவீதமாகவே உள்ளது.

எனவே தில்லியில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் ஏதெனும் திடீா் மாற்றங்கள் வந்தால் பள்ளிகளை மீண்டும் மூடிவிடலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

முதல்வா் வீட்டின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்ாக ஜெயின் மேலும் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com