கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி உறுப்பினா்கள் 17 போ் இடைநீக்கம்

கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினா்கள் 17 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினா்கள் 17 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்து. கிழக்கு தில்லியில் உள்ள ஒரு கோயில் தொடா்பான பிரச்னை அவையில் விவாதத்துக்கு வந்தது. அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக மாநகராட்சியின் மேயா் ஸியாம் சுந்தா் அகா்வால் ஆம் ஆத்மி உறுப்பினா்கள் 17 பேரை அவையிலிருந்து 15 நாள்களுக்கு இடைநீக்கம் செய்தாா்.

இந்த 17 உறுப்பினா்களில் எதிா்க்கட்சியின் நியமன உறுப்பினா்களும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா். பாஜக ஆளும் கிழக்கு தில்லி மாநகராட்சியில் பாஜக சாா்பில் தற்போது 64 உறுப்பினா்கள் உள்ளனா். அடுத்த ஆண்டு மாநகராட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com