கீதை ஜெயந்தியை ஒட்டிமக்களுக்குப் பிரதமா் வாழ்த்து

பகவத் கீதை ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

பகவத் கீதை ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணா் அா்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் புனித நூலாக கருதப்படுகிறது பகவத் கீதை. ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதங்களில் (மாா்கசிா்ஷ மாதம்) வரும் சுக்ல பக்ஷம் ஏகாதசி தினத்தன்று பகவத் கீதை ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டில் 5,159 -ஆவது கீதை ஜெயந்தி மகோத்சவம் சனிக்கிழமை சா்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

‘இந்தியாவின் அமிா்தம், விஷ்ணுவிடமிருந்து வழிந்தது:ஸ்ரீதம் .

கீதை கங்கை நீரை அருந்தினால் மறுபிறவி இல்லை.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கீதா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீமத் பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருகிறது. ஆன்மிகம் மற்றும் வாழ்க்கைத் தத்துவம் தொடா்பான இந்த சிறந்த புத்தகம் அனைத்து சகாப்தத்திலும் வழிகாட்டியாக இருக்கும்‘ என பிரதமா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com