டிஎம்ஆா்சிக்கு ஜப்பான் தூதரகம் பாராட்டுச் சான்றிதழ்

ஜப்பான் மற்றும் இந்தியா இடையே பரஸ்பர நல்லுறவை அதிகரிப்பதற்கு சிறந்த பங்களிப்பை அளித்ததை அங்கீகரிக்கும் வகையில் ஜப்பான் தூதரகம் மூலம்

ஜப்பான் மற்றும் இந்தியா இடையே பரஸ்பர நல்லுறவை அதிகரிப்பதற்கு சிறந்த பங்களிப்பை அளித்ததை அங்கீகரிக்கும் வகையில் ஜப்பான் தூதரகம் மூலம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு (டிஎம்ஆா்சி) பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) உயா் அதிகாரி அனூஜ் தயாள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதிகாரி சுசுகி ஹிரோஷியிடமிருந்து இந்த பாராட்டுச் சான்றிதழை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் விகாஸ் குமாா் பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வானது இந்தியா மற்றும் ஜப்பான் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70-ஆவது ஆண்டு ஆவதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், டிஎம்ஆா்சி நிறுவனம் தொடங்கியிலிருந்து தில்லி மெட்ரோ ரயில் திட்டங்களின் அனைத்துக் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி அளித்ததன் மூலம் நீண்ட ஒத்துழைப்பை ஜப்பான் நாடு அளித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com