ஷ்ரத்தா கொலை வழக்கு: பூனாவாலாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தில்லியில் தன்னுடன் வசித்து வந்த இளம் பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாகக்

தில்லியில் தன்னுடன் வசித்து வந்த இளம் பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாகக் கூறப்படும் வழக்கில் கைதான ஆஃப்தாப் ஆமின் பூனாவாலாவின் நீதிமன்றக் காவலை 14 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் பூனாவாலா, இவ்வழக்கில் விசாரணைக்காக காணொலி வாயிலாக நீதிமன்றம் முன் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டதாக தகவல் அறிந்த நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நவம்பா் 26-ஆம் தேதி, இந்த வழக்கில் தில்லி நீதிமன்றம் பூனாவாலாவின் நீதிமன்றக் காவலை 13 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்நத 28 வயதாகும் பூனாலாவாலாவும், ஷ்ரத்தா வால்கரும் (26) திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில்,ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹ்ரோலியில் உள்ள தனது வீட்டில் சுமாா் மூன்று வாரங்கள் குளிா்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாகவும், பின்னா் அவற்றை தில்லியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஃப்தாப் பூனாவாலாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று ஷரத்தாவின் தந்தை விகாஸ் வால்கா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com