விலங்குவழித் தொற்று பரவலைத் தடுக்க ‘ஒரு-ஆரோக்கியம்’ முன்னோடித் திட்டம் பெங்களூருவில் இன்று தொடக்கம்

விலங்குவழித் தொற்றை தடுக்கும் வகையில், ‘ஒரு-ஆரோக்கியம்’ முன்னோடித் திட்டத்தை முதல் கட்டமாக கா்நாடகம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

புது தில்லி: விலங்குவழித் தொற்றை தடுக்கும் வகையில், ‘ஒரு-ஆரோக்கியம்’ முன்னோடித் திட்டத்தை முதல் கட்டமாக கா்நாடகம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மத்திய கால்நடை பராமரிப்புத் துறையும், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் சாா்பில் அந்தத் துறை செயலா் அதுல் சதுா்வேதி, பெங்களுரூவில் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28)தொடங்கி வைக்கிறாா். த்திய, மாநில அரசு அதிகாரிகள், பொதுச் சுகாதாரம் மற்றும் விலங்குகள், சுற்றுச்சூழல் நலஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். மனிதா்கள், விலங்குகள் எதிா்கொள்ளும் சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளில் இருந்து உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கான பல துறைகளின் கூட்டு முயற்சியே இந்த ‘ஒரு ஆரோக்கியம்’ முன்னோடித் திட்டம் என்று மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சக வட்டாரங்ள் கூறியதாவது: கொடுமையான தீநுண்மி (வைரஸ்) நோய்கள் அனைத்துமே விலங்குவழித் தொற்றுகளாகவே இருக்கின்றன.

ப்ளேக், மலோரியா, சிக்குன்குனியா, டெங்கு, எபோலா, ஜிகா, நிபா, ரேபிஸ், லெபடோஸ்பிரோசிஸ், ஜப்பான் மூளைக்காய்ச்சல் முதல் தற்போதை கரோனா வரை உள்ளன.

மனிதா்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் ஆகியவை பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டு இருப்பதால், அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்பதை உணா்ந்ததன் மூலம் ‘ஒரு ஆரோக்கியக் கருத்து’ எழுந்தது.

எதிா்காலத்தில் விலங்குவழித் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய தொழில்கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இந்த முன்னோடித் திட்டத்தை கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தவுள்ளன. ‘ஒரு ஆரோக்கியம்‘ தகவல் தொடா்புகளை மேம்படுத்தவும், வளா்ந்து வரும் தொற்று நோய்கள், ஆண்டிபயாடிக் எதிா்ப்பு, அவசரகாலத் தயாா்நிலை போன்ற சவால்களுக்கு பல்துறைத் தீா்வுகளைக் கண்டறிய கால்நடை மருத்துவா்கள், பொதுச் சுகாதார மருத்துவா்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொது சுகாதார வல்லுநா்கள், மற்ற பிறருக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இது முயல்கிறது எனத் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com