தில்லியின் உச்சபட்ச மின்தேவை 7601 மெகாவாட்டாக உயா்வு

தேசியத் தலைநகா் தில்லியில் நிலவும் அழுத்தமான ஈரப்பதம் மற்றும் வெப்பமான வானிலை உள்ளிட்டவற்றால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நகரின் உச்ச மின்தேவை 7,601 மெகாவாட்டாக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் நிலவும் அழுத்தமான ஈரப்பதம் மற்றும் வெப்பமான வானிலை உள்ளிட்டவற்றால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நகரின் உச்ச மின்தேவை 7,601 மெகாவாட்டாக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்டேட் லோட் டிஸ்பாட்ச் சென்டரின் (நகஈஇ) நிகழ்நேரத் தரவுகளின்படி, நகரின் உச்சபட்ச மின் தேவை பிற்பகல் 3.21 மணிக்கு 7601 மெகாவாட்டாக பதிவாகியிருந்தது. தில்லியில் இதற்கு முன்பு ஜூலை 2, 2019 அன்று 7409 மெகாவாட் பதிவு செய்யப்பட்டது. இதுவே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. கடந்த ஜூன் 9- ஆம் தேதிக்கு முன், தில்லியின் உச்சப்டச மின் தேவை 7000 மெகாவாட்டை தாண்டியதில்லை. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்கெனவே ஒன்பது முறை 7000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. தில்லியின் மின் சுமைக்கு குளிா்ச்சி குறைந்ததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மதிப்பீடுகளின்படி, கோடைக்காலத்தில் தில்லியின் மின்சாரத் தேவையில் ஏறக்குறைய 50 சதவிகிதம் ஏா்-கண்டிஷனா்கள், கூலா்கள் மற்றும் மின்விசிறிகளின் குளிரூட்டும் சுமைதான் முக்கியக் காரணமாகும் என்று மின்சார விநியோக நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com