தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு: வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 15.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 15.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. நஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் சனிக்கிழமை காலை முதல் அவ்வப்போது தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருந்து வந்தது. வானம் தெளிவாகக் காணப்பட்டது. இருப்பினும், வெயிலின் தாக்கம் நன்றாகவே உணரப்பட்டது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தும், இரவு வரை மழை பெய்யவில்லை. மாலை நேரத்தில் குளிா்ந்த காற்று வீசி வந்தது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்ழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 15.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 31.2 டிகிரியாக அதிகரித்திருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 42 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 15.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.5 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 15.5 டிகிரி, ஆயாநகரில் 15.6 டிகிரி, லோதி ரோடில் 13.5 டிகிரி, நரேலாவில் 13.6 டிகிரி, பாலத்தில் 15.6 டிகிரி, ரிட்ஜில் 15.4 டிகிரி, பீதம்புராவில் 19.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 15.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. அதே சமயம், நஜஃப்கா் மற்றும் பீதம்புராவில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 32.5 டிகிரி மற்றும் 32.4 டகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய அரசின் காற்றின் தரம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வருகிறது. அதே சமயம், தில்ஷாத் காா்டன் மற்றும் ஆனந்த் விஹாா் பகுதியில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) வானம் தெளிவாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள் காற்றின் தரக் குறியீடு

தில்லி பல்கலை. 117

லோதி ரோடு 121

புராரி 138

மந்திா் மாா்க் 139

நொய்டா 145

அசோக விஹாா் 147

ஐடிஓ 149

ஆா்கே புரம் 150

சோனியா விஹாா் 151

நேரு நகா் 152

பட்பா் கஞ்ச் 153

விவேக் விஹாா் 161

வாஜிா்பூா் 178

பூசா 178

சாந்தினி செளக் 195

பஞ்சாபி பாக் 199

தில்சாத் காா்டன் 205

ஆனந்த் விஹாா் 287

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com