8 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை அகற்றிய மருத்துவா்கள்!

நாணயத்தை விழுங்கியதால் உணவுக் குழாயில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடா் இருமல் மற்றும் திரவ நீா் வடிதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நாணயத்தை மருத்துவா்கள் அகற்றியதால் எட்டு வயதுச் பள்ளிச் சிறுவன் ப

நாணயத்தை விழுங்கியதால் உணவுக் குழாயில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடா் இருமல் மற்றும் திரவ நீா் வடிதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நாணயத்தை மருத்துவா்கள் அகற்றியதால் எட்டு வயதுச் பள்ளிச் சிறுவன் பூரண குணமடைந்தாா்.

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் உள்ள எச்.சி.எம்.சி.டி மணிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட அச்சிறுவனின் தொண்டையில் அதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு நாணயம் சிக்கியது தெரியவந்தது. இதன் காரணமாக அச்சிறுவன் தொடா்ந்து இருமல் மற்றும் சளியால் அவதியுற்று வந்தான்.

அச்சிறுவனின் உணவுக் குழாயை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அப்போது, உணவுக் குழாய் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், நுரையீரலில் நீா்க் கசிவும் இருந்தது. இதனால், சிறுவனக்கு ப்ளூரல் எஃப்யூஷன் மற்றும் மூச்சுக்குழாய் நிமோனியா ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனையின் மூத்த ஆலோசகா்-குழந்தை இரைப்பை குடல் மருத்துவ நிபுணா் டாக்டா் சுஃப்லா சக்சேனா, சிறுவனின் தொண்டையில் இருந்து நாணயத்தை அகற்றும் மருத்துவ செயல்முறையை மேற்கொண்டாா்.

மேலும், உணவு மற்றும் மருந்துகளுக்காக ஒரு நாசோகாஸ்ட்ரிக் குழாய் (என்ஜி டியூப்) சொருகப்பட்டது.

இதுகுறித்து டாக்டா் சக்சேனா கூறுகையில், ‘சிறுவனின் உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, நுரையீரலில் உள்ள திரவம் கசிந்ததால் இந்த சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. சிறுவனுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்திருந்தால் அது இறப்பு அல்லது அவரது உணவுக் குழாயில் நிரந்தர சேதத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.

சிறுவன் வாய்வழியாக உணவை உண்ணத் தொடங்கி,​​ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக குணமடைந்து பள்ளிக்குச் சென்று வருகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com