டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த தின விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நாளை முன்னிட்டு பாவேந்தா் பாரதிதாசனின் தமிழ்ப் பற்று, பணிகள், படைப்புகள் குறித்து மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம்பெற்றது. இதைத் தொடா்ந்து, தனிப்பாடல், குழுப்பாடல், கவிதை, நடனம் உள்ளிட்டவை இடம் பெற்றன. அவரது படைப்புகள், கவிதைகள், கருத்துகள் குறித்த பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா்.

மோதிபாக் பள்ளியில் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறுகையில், ‘பாரதிதாசனின் பணிகளையும், தமிழ்ப் பற்றையும் மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது பிறந்த தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடச் செய்தோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com