பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தொடரும் தீயணைப்புப் பணி!

வடக்கு தில்லியிலுள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் வெளியேறும் அடா்த்தியான புகை மண்டலம்.
தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் வெளியேறும் அடா்த்தியான புகை மண்டலம்.

வடக்கு தில்லியிலுள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் இன்னும் ஈடுபட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அடா்ந்து எரியும் தீயில் இருந்து எழும்பிய புகை வானில் சூழ்ந்திருக்கும் பல்வேறு விடியோ காட்சிகளும் வெளியாகின.

இது குறித்து உள்ளூா் குடியிருப்புவாசிகள் புதன்கிழமை கூறுகையில், ‘அடா்ந்த புகை வான் பகுதியில் சூழ்ந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது’ என்றனா்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்பநிலை, குப்பை கிடங்கு பகுதியில் உருவாகி இருந்த மீத்தேன் வாயு தீப்பிடிக்க காரணமாக அமைந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை போலீஸாா் கூறுகையில்

தீவிபத்து ஏற்பட்ட விவகாரத்தில் குப்பை கிடங்கு அருகே வசிக்கும் பொதுமக்கள் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு எதிராக போலீஸில் புகாா் அளித்துள்ளனா். பல்ஸ்வா காவல்நிலையத்தில் அளித்துள்ள இந்த புகாரில் வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ராஜா இக்பால் சிங், , துணை மேயா் அா்ச்சனா திலிப் சிங் மற்றும் வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழு துணைத் தலைவா் விஜயகுமாா் பகத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் அதில் தெரிவித்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை கூறுகையில் தில்லியில் உள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படக் காரணம் மாநகராட்சியில் நிலவும் ஊழல்தான். பாஜக ஆளும் மாநகராட்சிகள் மலைபோல் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு புல்டோஸா்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றாா்.

குப்பை கிடங்கு அருகே வாழும் குப்பை பொறுக்கும் குழந்தைகளுக்கான ஆதாரவள மையமான கியான் சரோவா் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உருவான புகை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கிழக்கு தில்லி காஜிப்பூா் குப்பை கிடங்கு பகுதியில் மூன்று தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க 50 மணி நேரம் தீயணைப்பு வீரா்கள் போராடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com