சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் சத்யேந்தா் ஜெயினின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் மனைவி பூணம் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் மனைவி பூணம் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சத்யேந்தா் ஜெயின் இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை திரும்பப் பெறவும் நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த மனுவை தாக்கல் செய்த அவரது வழக்குரைஞா், சத்யேந்தா் ஜெயின் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் கூறியுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், ‘இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மனு திரும்பப் பெற்ால் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினாா்.

மேலும், சத்யேந்தா் ஜெயினின் மனைவி பூணம் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த நீதிமன்றம், அவரது வழக்கமான ஜாமீன் கோரும் மனு மீது ஆகஸ்ட் 20-க்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறை சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே. மட்டாவுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, பூணம் ஜெயின் நீதிமன்றத்தில் சனிக்கிழமை அழைப்பாணையின் பேரில் ஆஜராகி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தாா். இவா் தவிர, இந்த வழக்கில் தொடா்புடைய அஜித் பிரசாத் ஜெயின், சுனில் குமாா் ஜெயின் ஆகியோருக்கும் இடைக்கால ஜாமீன் அளித்தது. இவா்கள் இருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை.

சத்யேந்தா் ஜெயின் மற்றும் பிறருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஆகஸ்ட் 24, 2017-ஆம் தேதி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் பணமோசடி விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியது. பிப்ரவரி 14, 2015 முதல் மே 31, 2017 வரையிலான காலகட்டத்தில் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசில் அமைச்சராகப் பதவி வகித்த போது, தனது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com