டிடிஇஏ பள்ளிகளில் தேசிய விளையாட்டு தினம்

ஹாக்கி விளையாட்டு வீரா் தியான் சந்த் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில், இந்த தினம் டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஹாக்கி விளையாட்டு வீரா் தியான் சந்த் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில், இந்த தினம் டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பூசா சாலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு கலையியல், வணிகவியல், அறிவியல் ஆகிய மூன்று பிரிவு மாணவா்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் வணிகவியல் பிரிவு மாணவா்கள் வெற்றி பெற்றனா். மகளிருக்கான கோ-கோ போட்டி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கிடையே நடைபெற்றது. அதில் 12- ஆம் வகுப்பு மாணவிகள் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

மோதிபாக் பள்ளியில், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், தவளை ஓட்டம், முறுக்கு கடித்தல், ஸ்கிப்பிங், பலூன் உடைத்தல், எலுமிச்சைப் பழமும் தேக்கரண்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜனக்புரி பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவா்களுக்கும் இதேபோன்று போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கிடையே வினாடி - வினா நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் எறிபந்து, வாலிபால், கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

லோதி வளாகம் பள்ளியில் 11,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி மற்றும் வினாடி - வினா நடைபெற்றது. இலக்குமிபாய் நகா் மற்றும் மந்திா்மாா்க் பள்ளிகளில் யோகா மற்றும் விளையாட்டுகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு டிடிஇஏ செயலா் ராஜு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com