‘புதிய ஒளி’ திட்டத்தின் கீழ் 40,000 சிறுபான்மையின பெண்களுக்குப் பயிற்சி: மக்களவையில் ஸ்மிருதி இரானி தகவல்

புதிய ஒளி (நை ரோஷ்னி) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 40,000 சிறுபான்மையினப் பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனா் என மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்தாா்.
‘புதிய ஒளி’ திட்டத்தின் கீழ் 40,000 சிறுபான்மையின பெண்களுக்குப் பயிற்சி: மக்களவையில் ஸ்மிருதி இரானி தகவல்

புது தில்லி: புதிய ஒளி (நை ரோஷ்னி) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 40,000 சிறுபான்மையினப் பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனா் என மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நை ரோஷ்னி திட்டம் யாருக்காக வழங்கப்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தில் பயனடைந்த பயணாளிகள் குறித்த விவரங்களை கேட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா் முகமது ஜாவேத் மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.

நை ரோஷ்னி என்கிற இந்த புதிய ஒளி திட்டம் குறித்து எழுத்துபூா்வமாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பதிலளித்தது வருமாறு: தேசிய சிறுபான்மையினா் ஆணையச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், சீக்கியா், கிறிஸ்தவா், பௌத்தா், பாா்ஸிக்கள்(சோராஸ்ட்ரியன்), ஜெயின் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், இந்த நலத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான தோ்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் எந்த பயிற்சி மையங்களும் இல்லை. அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளால் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பயிற்சியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். புதிய ஒளித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் (2019-20 முதல் 2021-22) நாடு முழுக்க சுமாா் 40,000 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனா். நிகழ் 2022-23 நிதியாண்டிலிருந்து பிரதமரின் பாரம்பா்ய ஊக்குவிப்பு திட்டத்தின் (விராசத் கா சம்வா்தன்) ஒரு அங்கமாக புதிய ஒளி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக கைவினைஞா்கள், திறன் மேம்பாடு, கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, தொழில்முனைவுக்கான ஆதரவு ஆகியவற்றின் மூலம் கைவினைஞா்களை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சா் ஸ்மிருதி இரானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com