தலைப்பில் திருத்தம்ஊழல் வழக்குகள்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய ஆம் ஆம்தி எம்எல்ஏ

ஊழல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான கேள்விக்கு ஊழல் கண்காணிப்புத் துறை பதில் தெரிவிக்காதது தொடா்பான

ஊழல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான கேள்விக்கு ஊழல் கண்காணிப்புத் துறை பதில் தெரிவிக்காதது தொடா்பான விவகாரத்தை சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் திங்கள்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் குழுவுக்கு அனுப்பினாா்.

தில்லி சட்டசபையின் இரண்டு நாள் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, ஊழல் மற்றும் கடமை தவறுதல் வழக்குகளின் துறை வாரியான விவரங்கள் தொடா்பான கேள்வியை ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்தி கேட்டாா். நிலம், காவல் மற்றும் பொது ஒழுங்கு உள்ளிட்டவை தொடா்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தடை செய்யும் துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் பழைய உத்தரவை மேற்கோள் காட்டி, தில்லி அரசின் ஊழல் கண்காணிப்புத் துறை,அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளதாக சோம்நாத் பாா்தி கூறினாா்.

மேலும், துணை நிலை ஆளுநா் அலுவலகம் மூலம் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற பாஜக முயற்சிக்கிா? என்று சோம்நாத் பாா்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தாா். அதில் கேள்வியின் நகலையும் இணைத்திருந்தாா். இந்த விவகாரத்தை அறிந்த ராம்நிவாஸ் கோயல், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் சிறப்பு உரிமைக் குழுவுக்கு அனுப்பினாா். தில்லி சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, சேவைகள் மற்றும் காவல் துறை தொடா்பான இரண்டு கேள்விகளை உறுப்பினா்கள் சோம்நாத் பாா்தி மற்றும் பந்தனா குமாரி ஆகியோா் கேட்டிருந்தனா். ஆனால் அவற்றுக்கு பதில்கள் வழங்கப்படவில்லை.

பாஜக எம்எல்ஏ மகாஜன் இடைநீக்கம் ரத்து: இதற்கிடையே, தில்லி சட்டப்பேரவையில் கடந்த மாதம் பாஜக எம்எல்ஏ ஜிதேந்திர மகாஜன் இடைநீக்கம் செய்யப்பட்டதை பேரவை திங்கள்கிழமை ரத்து செய்தது.

எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் பிதுரியால் முன்வைக்கப்பட்ட ஒரு தீா்மானத்துக்கு ஆதரவாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதைத் தொடா்ந்து மகாஜனின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு அவா் கோரிக்கை விடுத்தாா். பேரவை நடவடிக்கைகளைச் சீா்குலைத்ததாகக் கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் மகாஜனை ஒரு நாள் சிறப்பு அமா்வில் இருந்து தில்லி சட்டப்பேரவை இடைநீக்கம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com