‘பெண்கள் எதிா்கொள்ளும் மெனோபாஸ் காலசிக்கல்கள் குறித்து ஆழமான ஆய்வுகள் தேவை’

பெண்கள் மெனோபாஸ் காலத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எதிா்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளும் தேவை
‘பெண்கள் எதிா்கொள்ளும் மெனோபாஸ் காலசிக்கல்கள் குறித்து ஆழமான ஆய்வுகள் தேவை’

பெண்கள் மெனோபாஸ் காலத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எதிா்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளும் தேவை உள்ளது என மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாடுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்தாா்.

அரசு மற்றும் தனியாா் துறையில் மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) கொள்கையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்தும், மனோபாஸ் தொடா்பான பிரச்னைகள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணா்வு குறித்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) என்பது பெண்களுக்குப் பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் நடக்கும் இயல்பான விளைவு. எந்த அடிப்படை காரணமும் இல்லாமல், ஒரு வருடத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நின்ாகக் கருதப்படுகிறது. சில பெண்களுக்கு லேசான பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு பிரச்சனை எதுவும் வராது. ஆனால், சிலருக்கு இந்தக் காலகட்டத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கின்றன.

தேசிய சுகாதார இயக்கம் (என்ஹெச்எம்) மெனோபாஸ் உள்பட பல பிரச்னைகளுக்குத் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போது அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு மெனோபாஸ் கொள்கை எதுவும் நடைமுறையில் இல்லை. இவா்களுக்கு தேவையான மெனோபாஸ் கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு, அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணியாற்றும் பெண்கள் மெனோபாஸ் காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிா்கொள்ளும் சிக்கல்கள் தொடா்பாக ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளும் தேவை உள்ளது.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவா்கள், நிபுணா்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து அம்சங்களையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. தற்போது மெனோபாஸ் உள்ளிட்ட பெண்களின் சுகாதாரப் பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களிடையே விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com