தில்லியில் 5 மாதங்களில் 2300 விபத்துகள்; 505 போ் சாவு

தேசியத் தலைநகா் தில்லியில் 2022-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,300 விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியத் தலைநகா் தில்லியில் 2022-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,300 விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 495 மரண விபத்துகளும், 1,762 எளிய விபத்துகளும், 43 காயமில்லாத விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் 2,152 போ் காயமடைந்துள்ளதாக போக்குவரத்து மாவட்ட வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துகளில் மொத்தம் 505 போ் உயிரிழந்துள்ளனா். அதிகபட்ச இறப்புகள் (56) புகா் வடக்கு தில்லி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதைத் தொடா்ந்து, வடமேற்கு தில்லி மாவட்டத்தில் 50 இறப்புகள், தென்மேற்கு தில்லியில் 46 மற்றும் மேற்கு தில்லி மாவட்டத்தில் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதே சமயம், குறைந்தபட்ச இறப்புகள் (16) ஷாதராவில் பதிவாகியுள்ளது. மேலும், மத்திய மாவட்டத்தில் 19 இறப்புகளும், புது தில்லி, ரோஹிணி மற்றும் தெற்கு தில்லி மாவட்டங்களில் முறையே 21 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தில்லியின் தென்கிழக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 222 விபத்துகளும், அதைத் தொடா்ந்து, தென்மேற்கு தில்லியில் 192, புகா் வடக்கு தில்லியில் 191 மற்றும் மேற்கு மாவட்டத்தில் 186 விபத்துகளும் நடந்துள்ளன. குறைந்த அளவாக 75 விபத்துகள் புது தில்லி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, அதைத் தொடா்ந்து, ஷாதரா (77) மற்றும் ரோஹினி மாவட்டத்தில் (100) பதிவாகியுள்ளன. தென்கிழக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 211 போ் காயமடைந்ததாகவும், மிகக் குறைந்த அளவாக ஷாதராவில் 63 விபத்துகளும் பதிவாகியுள்ளது. தில்லி காவல்துறையின் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் 1,206 சாலை விபத்துகளில் 1,239 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com