காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: கட்சியின் தில்லி கூட்டத்தில் தீா்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியதாக அதன் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்தாா்.
காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: கட்சியின் தில்லி கூட்டத்தில் தீா்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியதாக அதன் தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்தாா்.

இந்த தீா்மானம் இரண்டு நாள் ’நவ் சங்கல்ப் ஷிவிா்’ கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவா் குறிப்பிட்டாா். காங்கிரஸ் கட்சிக்கு சவாலான காலகட்டங்களில் ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவரால் மட்டுமே காங்கிரஸை மேலும் வலுப்படுத்தவும், புத்துயிா் பெற வைக்கவும் முடியும் என்று அந்தத் தீா்மானம் கூறியுள்ளது. ராஜேந்தா் நகா் இடைத்தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதாவும் நவ் சங்கல்ப் ஷிவிா் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.

மேலும், காங்கிரஸ் கட்சியினா் அடிமட்டத்தில் இருந்து உயா்மட்டத் தலைமை வரை உள்ளூா் மக்களிடம் சென்று பாஜகவின் தவறான ஆட்சியையும், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசின் ஊழலையும் அம்பலப்படுத்துவாா்கள். இதன் மூலம் பிரேம் லதாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அனில் குமாா் சௌத்ரிகூறினாா்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், அவரை வெற்றி பெற வைக்கவும் மூத்த தலைவா்கள் பலா் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா். தில்லி காங்கிரஸ் பொறுப்பாளா் ஷக்திசிங் கோஹில், முன்னாள் எம்.பி.க்கள் ரமேஷ் குமாா், உதித் ராஜ், தில்லியின் முன்னாள் அமைச்சா்கள் ஹாரூன் யூசுப், டாக்டா் கிரண் வாலியா, நரேந்திரநாத் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com