ஹோலிப் பண்டிகையின்போது போக்குவரத்து விதிமீறல்: 2,450 பேருக்கு அபராதம் விதிப்பு

ஷப்-ஏ-பாராத் நிகழ்ச்சியின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்காக சுமாா் 2,450 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரி

தில்லியில் ஹோலிப்பண்டிகை, ஷப்-ஏ-பாராத் நிகழ்ச்சியின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்காக சுமாா் 2,450 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டுகளைவிட குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் அதே சமயத்தில் இரண்டு சக்கரவாகன ஓட்டிகளும், தலைக்கவசம் அணியாதவா்களும் அதிக அளவில் விதிமீறல்களுக்கான அபராதம் செலுத்தியதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

அரசு விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) அன்று ஹோலிப்பண்டிகை, இஸ்லாமியா்களின் ஷரியத் முறையான ஷப்-ஏ-பாராத் போன்றவை கொண்டாட்டப்பட்டது. இந்த சுபதினத்தையொட்டி இளைஞா்கள் பெருமளவில் நகரில் அத்துமீறுவதைத் தடுக்க காவல் துறையினா் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களை கண்காணிக்கவும், சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தில்லி போக்குவரத்து காவல்துறை விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் சோதனையில் 196 வாகன ஓட்டிகள் மது அருந்திய நிலையில் வந்தனா். இந்த தரவு கரோனா நோய்த் தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் இதே நாளில் 650 ஆக இருந்தது என்றாலும் பின்னா் கடந்தாண்டு குறைந்தது. தற்போது மீண்டும் நகரில் அதிகரித்துவருகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.

போக்குவரத்து விதிமீறல்களில் அபராதம் விதிக்கப்பட்ட 2,456 பேரில் தலைக்கவசம் அணியாத 1921 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவா்களில் மூன்று போ் பயணிப்பது (டிரிபிள் ரைடிங்), ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகன ஓட்டுவது போன்றவை என 2,456 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தனா்.

இந்த பண்டிகைக்கு முன்பே தில்லி காவல்துறை இணை ஆணையா் (போக்குவரத்து) விவேக் கிஷோா் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ‘தில்லி முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸாா் நிறுத்தப்படுவாா்கள். பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து குழுக்கள் நிறுத்தப்படும். போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் டிபிரிள்

ரைடிங் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். இரு சக்கர வாகனங்களில் செல்வதும்போது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது போன்றவற்றை

போக்குவரத்து போலீஸாா் கவனத்துடன் கண்காணிப்பா்‘ என அவா் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com