பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு எதிரான வழக்கு ரத்து; தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

மைனா் பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 21 வயது இளைஞருக்கு

மைனா் பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 21 வயது இளைஞருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட நபா் பாலியல் தொடா்புடைய செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், தற்போதைய வழக்கு நடவடிக்கைகள் தொடா்ந்தால் அது பயனற்ாக இருக்கும் என்பதுடன் மைனா் பெண்ணுக்கு அதிக மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மேனன், 21 வயது இளைஞரின் மனுவை அனுமதித்து, தில்லி ராஜீந்தா் நகா் காவல் நிலையத்தில் மைனா் பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்காக அவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் மைனா் பெண் அளித்த வாக்குமூலத்தைப் பாா்க்கும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் குற்றம்சாட்டப்பட்ட நபா் பாலியல் செயலில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிகழவில்லை என்பதற்கும் முகாந்திரம் உள்ளது’ உயா் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இளைஞரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பாா்த் கோஸ்வாமி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், ‘புகாா்தாரரும் குற்றம் சாட்டப்பட்டரும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில் எஃப்ஐஆரை ரத்து செய்யுமாறு கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது’ என்று கூறினாா்.

இது குறித்த வழக்கின்படி, கடந்த 2019-இல் ராஜீந்தா் நகா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ‘எனது 17 வயது மற்றும் 9 மாத வயதுடைய மகள் காணவில்லை’ எனபுகாா்தாரா் தெரிவித்திருந்தாா்.

காணாமல் போன நபரின் சலூனில் பணிபுரிந்த நபரும், சம்பந்தப்பட்ட மைனா் பெண்ணும் நண்பா்களாகினா். அதன் பின்னா், அந்த நபா் பெங்களூருக்கு சென்றுவிட்டாா். இந்த நிலையில், காணாமல் போன பெண் தன்னைச் சந்திக்க பெங்களூரு வந்ததாகவும் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல மறுத்ததாகவும், ஹோட்டலில் சில நாட்கள் தங்கியிருந்ததாகவும் அந்த இளைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, காணாமல் போனதாக கூறப்பட்ட மைனா் பெண், தனக்கும் அந்த இளைஞருக்கும் இடையே எந்தவிதமான உடல் உறவும் ஏற்படவில்லை என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவரைச் சந்திக்க பெங்களூரு சென்ாகவும் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பதிவு செய்தாா்.

இது தொடா்பான வழக்கில் அந்த இளைஞா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். பின்னா் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com