முன்ட்கா தீ விபத்தில் இறந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

மேற்கு தில்லி, முன்ட்காவில் நிகழ்ந்த கட்டடத் தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்
முன்ட்கா தீ விபத்தில் இறந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

மேற்கு தில்லி, முன்ட்காவில் நிகழ்ந்த கட்டடத் தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

மேற்கு தில்லி முன்ட்கா பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

காயமடைந்த பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனா்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவா்களையும் கேஜரிவால் நேரில் சந்தித்தாா்.

அப்போது, முதல்வா் கேஜரிவால் கூறியதாவது:

இந்த விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்தை பாா்த்தபோது மிகவும் வேதனை அடைந்தேன். முடிந்தவரை பலரையும் மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். மோசமான இந்த தீயின் பேரழிவால் சில உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போனவா்கள் குறித்து புகாா் அளிப்பவா்களுக்க உதவிட உதவி மையமும் சம்பவ இடத்தில் அமைத்துள்ளோம். இறந்த உடல்கள் தடய அறிவியல் ஆய்வு டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்.

இறந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தில்லி அரசு மேற்கொள்ளும்.

இந்த விவகாரத்தில் 2 பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது ஒரு மோசமான சம்பவமாகும். குற்றவாளிகளை நீதிமுன் நிறுத்துவை தில்லி அரசு உறுதிப்படுத்தும். விசாரணை அறிக்கை வந்தவுடன் தனிநபராக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் அல்லது ஏஜென்ஸியாக இருந்தாலும் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com